அலியார் வீதியில், திடீர் சோதனை-கஞ்சாவுடன் இளைஞன் கைது

0
10

அம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலியார் வீதியில், கேரளக் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அலியார் வீதிப் பகுதியில், அண்மைக்காலமாக கேரளா கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே 1 மில்லிக்கிராம் கேரளக் கஞ்சாவுடன் இளைஞன் கைது செய்யப்பட்டான். சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்படவுள்ளதாக, கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.