அல்குர்ஆன் மனனப் போட்டியில்
வெற்றியீட்டிய மாணவிகளுக்கு பாராட்டு

0
235

மட்டக்களப்பு காத்தான்குடி மஃஹ்துஸ்ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக்கல்லூரியில் நடைபெற்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிகளுக்கான பாராட்டு நிகழ்வு நேற்று கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி மாணவிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட
அல்குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிகளுக்கு பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் மாணவிகளும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

கல்லூரி அதிபர் எம்.ஏ.சி.ஜெயினுலாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கல்லூரியின் தலைவர்
அஷ்ஷெய்ஹ் எம்.சி.எம்.ரிஸ்வான் மதனீ, ரைஸ் சிறீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.பி.அக்ரம் நழீமி, அல்ஹாபிழ் மீராசாகிப் மற்றும் கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷெய்ஹ் மன்சூர் மதனீ உட்பட கல்லூரி விரிவுரையாளர்கள் ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர்