அல்ஹிறா மகா வித்தியாலயத்தில்
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

0
164

மட்டக்களப்பு காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை
கௌரவிக்கும் நிகழ்வு இன்று கல்லூரி கேட்பார் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலை, பாடசாலை அபிவிருத்திச் சங்கம். பாடசாலை பழைய மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் முகம்மட் சப்ரி தலைமையில் நடைபெற்றது.

காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் 2021ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் சிறந்த பெறு பேற்றை பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப் பட்டனர்.

இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம்.கலாவுதீன் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்‌.ஸபீல் நழீமி உட்பட கல்வி அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்