அனைத்து அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு ஒளடதங்களும், தம்வசம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவசர நிலைமை ஏற்பட்டால், அதற்கு முகங்கொடுக்கத் தயார் என, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.
ஹொரண பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், 350 அத்தியவசிய ஒளடதங்கள் உள்ளதாகவும் அதேவேளை சுமார் 100 ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும், ஒளடதங்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.