அவரைப் பாதுகாக்க முயற்சித்தோம் எம்மை மீறி பலருடன் தொடர்பினை ஏற்படுத்தினார்: அதிபர்

0
138

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் கடந்த 02 ஆம் திகதி சர்ச்சைக்குள்ளான ஹபாயா விடயம் தொடர்பில் பாடசாலையின் விழுமியங்களை மீறி குறித்த ஆசிரியர் செயற்பட்டதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். அவரைப் பாதுகாக்க முயற்சித்தோம் எம்மை
மீறி பலருடன் தொடர்பினை ஏற்படுத்தினார். பாடசாலையின் விழுமியங்களுக்கு அப்பால் ஆசிரியர் செயற்பட்டிருக்கிறார்.
ஒரு சிலரின் தகாத செயற்பாடுகள் ஒரு சமூகத்தின் பிளவிற்கு காரணமாக அமைகிறது. சமூகவலைதளங்களில் மாணவிகளின் படங்கள் சீரழிக்கப்படுகின்றன.

திருகோணமலையில் இன்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.