வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில், மகளிர் தின நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
அவள் தேசத்தின் பெருமைக்குரியவள் எனும் தொனிப்பொருளில், குடியிருப்பு சிறுவர் பூங்கா வளாகத்தில், நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது, பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், சமாசத்தில் நீண்ட காலமாக சேவையாற்றும் பெண் சாதனையாளர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.
சமாசத் தலைவர் சு.புவனேந்திரராசாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினராக, வவுனியா மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ம.சபர்ஜா பங்கேற்றதுடன், சிறப்பு விருந்தினராக, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் இந்திரா சுபசிங்க கலந்துகொண்டார்.