அஸ்ட்ரா செனகா இரண்டாவது சொட்டுக்கு பதிலாக ஸ்புட்னிக் V: பரிசீலிக்க கோரிக்கை!

0
437

கொவிஷீல்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதல் சொட்டு வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது சொட்டாக ஸ்புட்னிக் V தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் சொட்டு செலுத்துவதற்காக சுமார் 6 இலட்சம் கொவிஷீல்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இலங்கைக்கு தேவைப்படும் என குறித்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொவிஷீல்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டுவர அரசு பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அதனை பெற்றுக் கொள்ள முடியாது எனின் ஸ்புட்னிக் V தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.