அஸ்வெசும வங்கி கணக்கு திறப்பதற்கு வங்கிகளுக்கு முன்னால் காத்திருக்கும் மக்கள்

0
143

மலையகத்தில் அஸ்வெசும நலன்புரி நிதியினை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள், வங்கி கணக்குகளை திறப்பதற்காக ஹட்டன் நகரில் உள்ள மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியில் நேற்று மாலை முதல் காத்திருந்து வருவதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வங்கிகளில் கணக்கு திறப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

வங்கியில் அதிக நெரிசல் நிலை உருவானதால் வங்கி கணக்குகளை திறப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறிப்பிட்ட அளவு வங்கி கணக்கு மாத்திரம் திறக்கப்படுவதனால் பொதுமக்கள் முண்டியடித்து வங்கியிலேயே தங்கியிருந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிலர் போர்வை மற்றும் விரிப்புக்களை கொண்டு வந்து படுத்து உறங்குகின்றனர்.

வயோதிபர்கள் மற்றும் கைக் குழந்தைகளுடன் பெண்கள் தங்கியிருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.