ஆசிரியர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதாக தெரிவித்து இலங்கை ஆசியரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
ஆசியரியர் இடமாற்ற விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடக்கூடாது என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.