ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நிறைவு

0
141

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, இணையத்தள முறைமையில் விண்ணப்பிப்பதற்காக, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களை, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் சரியானதல்ல என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவு போதாது என கல்வி அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதனை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களை இந்தப் பணிகளுக்கு அழைப்பதைத் தவிர்த்து, ஆசிரியர்களை இணைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.