ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று!

0
10

இவ்வாண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று (29) தென்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே சூரிய கிரகணமாக தென்படுகிறது.இது ஒருசில நகரங்களில் முழுமையாகவும், ஒரு சில நாடுகளில் பகுதியாகவும் தெரிகிறது.

இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 அளவில் ஆரம்பமாகி மாலை 4.17 ற்கு உச்சத்தை அடைந்து பின்னர் 6.13 அளவில் முடிவடையும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 93 சதவீதத்ததால் சூரியன் மறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இவ்வாண்டிற்கான இரண்டாவது சூரியகிரகணம் செப்டெம்பர் 21 ஆம் திகதி தென்படவுள்ளது.