ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலம்: பயணிகள் கவலை

0
156

முல்லைத்தீவு நகரத்திற்குச் செல்லும் ஏ-35 வீதியின் வட்டுவாகல் பாலம் பாரியளவில் சேதமடைந்தள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நீண்ட காலமாக எவ்வித புனரமைப்புக்களுமின்றி காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாலத்தின் மையப்பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழி காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மழைக்காலங்களில் நீர் மட்டம் உயர்ந்து பாலத்தை மேவிச் செல்வதுடன், கனரக வாகனங்கள் இதன் ஊடாக செல்லும் போது மேலும் பாலம் முழுவதுமாக உடைந்து விழும் சாத்தியம் காணப்படுவதாகவும் அப்பாலத்தினூடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பல தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் உரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.