ஆரம்ப பாடசாலைகளை ஒழுங்குபடுத்த நிபுணர் குழு

0
353

தேசிய கொள்கை வகுக்கவும், நாட்டில் ஆரம்பப் பாடசாலைகளை ஒழுங்குபடுத்தவும் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த த சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தக் குழு தொகுத்த அறிக்கை இந்த மாதம் 11 ஆம் திகதி கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியால் 45 ஆயிரத்து 182 இற்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சில முன்பள்ளி ஆசிரியர்கள் பிற வேலை வாய்ப்புக்களை நாடுகின்றனர்.

எனவே முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய மாற்று வழிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.