ஆரையம்பதி பிறன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது

0
225

மட்டக்களப்பு – ஆரையம்பதியில் அமைந்துள்ள பிறன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக ஒரு வாத்திற்கு மூடுவதற்கான முடிவை ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தாளங்குடாவில் இயங்கிவரும் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 3000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றிவரும் நிலையில் கடந்த சில தினங்களாக இத்தொழிறசாலையில் கடமை புரியும் ஊழியர்களிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
நேற்று 71 தொற்றாளர்கள் இத்தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்டதையடுத்து தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு குறித்த ஆடைத்தொழிற்சாலையை மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த காப்பகுதியின் பின்னர் தொழிற்சாலைக்கு வருவோருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டபின்னர் கடமைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக ஆடைத் தாழிற்சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.