ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

0
459

நாட்டில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, களனி கங்கை, அத்தனகலு ஓயா, ஊருவல் ஓயா என்பன சிறியளவில் பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, மில்லனிய, களுத்துறை, ஹொரன, இங்கிரிய, மத்துகம ஆகிய பிரதேசங்களில், கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சீரற்ற வானிலை காரணமாக, ஆறு மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.