ஆறு மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மாலை 6.30 மணி வரை அமுலில் இருக்கும்.களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பகுதிகளிலும், மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர பிரதேச செயலகப் பகுதியிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட மற்றும் கிரியெல்ல பிரதேச செயலகப் பகுதிகளிலும் வசிப்பவர்களுக்கு 2ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க மற்றும் பாதுக்க பிரதேச செயலகப் பகுதிகளிலும், களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேச செயலகப் பகுதியிலும், நாகொட, நெலுவ, பத்தேகம, யக்கலமுல்லை மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கும் நிலை 1 மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. , மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல பிரதேச செயலகப் பகுதி மற்றும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.