ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தின் உதவியுடன் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பிரதேசசெயலாளர் வி.பபாகரனின் வேண்டுகோளுக்கமைய அம்பாறை மாவட்டத்தின் 241 ஆம் படைப்பிரிவின் கீழ் பிரிவில் வாழும் மக்களுக்கு இராணுவத்தின் மருத்துவ பிரிவினரால் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இதன் போது 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாத அதிகளவான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.