ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னப்பனங்காடு சிவில் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் வருமானம் குறைந்த மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கப்பட்டது.
நாட்டின் பொருளாதாரநிலை காரணமாக பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்டத்தில் வாழும் குடும்பங்களுக்கே குறித்த உலர் உணவுப்பொதிகள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவேந்திரகுமார சுவாமி குடும்பத்தின் நிதி ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
இதன்போது 50 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அன்பின் வழி நின்று கரம் கொடுத்து உதவும் கருணை இல்லங்கள் எனும் கருப்பொருளில் சிவில் பாதுகாப்புகுழுவின் தலைவர் சுவர்ணராஜ் தலைமையில் இடம்பெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்வில் சிவில் பாதுகாப்புபொலிஸ் அதிகாரி எச்.எம்.ரத்நாயக்க உறுப்பினர் ச.அனுராதா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.