ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய
பேரவையின் கௌரவிப்பு நிகழ்வு

0
149

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய சிறப்பு பட்டிமன்றமும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் நேற்று இடம்பெற்றது.
தமிழ் இலக்கிய பேரவைத் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன,; மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் எழுத்தாளர் கலாபூசணம் ஜோன்ராஜன் தமிழ் இலக்கிய பேரவை சார்பாக நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு கலை இலக்கிய துறையில் வெற்றி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு இன்றைய இளம் சமூகத்தினரின் வளர்ச்சிக்கு காரணம் குடும்பமா? சமுதாயமா? எனும் தலைப்பிலான சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன், சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய ஸ்தாபகர் த.கயிலாயபிள்ளை, ஆலையடிவேம்பு வர்த்தகர் சங்க தலைவர் இ.ஜெகநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.