இணுவில் கிராமத்தின் ஒரு பகுதியினை முடக்குவதற்கு தீர்மானம்!

0
539

யாழில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை  தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவுசிபார்சு செய்துள்ளது 

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில்  தொற்றாளர்கள் இனங் காணப்பட்ட  மூன்று கிராமங்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில்  உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட
இனுவில் கிராமத்தில் இனுவில் ஜே 190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில்  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுதன் 
காரணமாக இணுவில் கிராமத்தின்  ஒரு பகுதியினை   தனிமைப் படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் சிபார்சு  செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு  செயலணியின்  அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது .

குறித்த  இணுவில் கிராமத்தின் ஒரு பகுதியில்  பல தொற்றாளர்கள்   இனங் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியினை முடக்குவதற்கு அனுமதி கோரி சுகாதாரப் பிரிவினரால்  விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.