நாடளாவிய ரீதியில் இன்றையதினம் கா.பொ.த சாதாரண பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.
நாட்டில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்தவருடம் மார்கழி மாதத்தில் நடத்தப்படவேண்டிய பரீட்சையானது 2023 மே மாத இறுதியில் இடம்பெறுகின்றது.
இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமான நிலையில், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பரீட்சை நிலையமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் பரீட்சை இடம்பெறும் நிலையத்தில் அமைதியை பேணுமாறு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் தப்புத்தப்பாக அதாவது பரீட்சை நிலையம் என்பதனை நலையம் எனவும், அமைதியை எனும் சொல் அமைதயை என்றும் எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில் என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை என சமூகவலைத்தளங்களில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.