இந்தாண்டு பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீடத்திற்கு 87% பெண்கள் அனுமதி

0
154
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு இவ்வருடம் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 87 வீதமானவர்கள் பெண்கள் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு, கலைப் பீடத்திற்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட 1,130 மாணவர்களில் 980 பேர் பெண்களாவர்.சமீபத்திய ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.