இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு
இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாண இந்திய துணைத் தலைவர் ராகேஷ் நட்ராஜ் வாசித்தளித்தோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது,
குடியரசு தின நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள் இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டனர்,