இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம் : 4 பேர் உயிரிழப்பு!

0
6

இந்தியாவில் 4 மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து சம்பவம் சனிக்கிழமை (19) அதிகாலை டில்லியிலுள்ள முஸ்தபாபாத் நகரில் இடம்பெற்றுள்ளது.  

கட்டிட இடிபாடுகளில் இருந்தவர்களில் இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்ட நிலையில்,கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

இதேவேளை, இடிந்து விழுந்த கட்டிடத்தில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகளும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.