இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பறவை காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பிரிவு அனுமதி அளிக்கவில்லை என்று அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரசாங்கமானது முட்டையை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்த நிலையில், டென்டர் அறிவிப்பு விடுத்துள்ள சர்வதேச விநியோகஸ்தர்களில் 90 சதவீதமானோர் இந்திய விநியோகஸ்தர்கள் என்றும் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.