இந்தியா பயணமாகிறார் ரணில் – பல முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு!

0
16

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு சென்று விசேட உலகளாவிய நிகழ்வுகள் தொடர்பான உரை நிகழ்த்தவுள்ளார்.

இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (28) விரிவுரை நடைபெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் ஆகியோர் இங்கு உரையாற்றுகிறார்கள்.

தெற்காசியா தொடர்பான விரிவுரையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றவுள்ளார்.

இந்த இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இங்கு அவர் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடனும் கலந்துரையாட உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்திற்குள் இந்தியாவிற்கு விஜயம் செய்வது இது மூன்றாவது தடவையாகும் இந்நிலையில், அவர் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.