இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இந்திய தூதுவரின் அழைப்பிற்கு அமைய, குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.