இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை வருகை

0
211

‘பூகோள சமுத்திர வலயம்’ என்ற தொனிப்பொருளின்கீழ் முன்னெடுக்கப்படும் சர்வதேச யோகா தினத்தின் 9ஆவது பதிப்பினை அனுஷ்டிக்கும் முகமாக, இந்திய கடற்படையின் நவீன தயாரிப்பான கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பலான ‘வாஹிர்’ நேற்று கொழும்புக்கு வருகைதந்துள்ளது.

இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மேற்கு கடற்படை கட்டளையில் நாளை நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் குறித்த நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படையினர் பங்கேற்க உள்ளனர்.

வாஹிர் கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்ச்சிகளில் இந்திய கடற்படையினர் பங்கேற்கவும், பல பகுதிகளை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ‘வாஹிர்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாளை மறுதினம் நாட்டில் இருந்து புறப்பட உள்ளது.