இந்திய பிரதமர் மற்றும் பாகிஸ்தான் பிரதமரை ஒரே நேர்கோட்டில் நிறுத்தி ட்ரம்ப் புகழாரம்

0
12

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில்இ இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. நாளை போர் நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் கலந்துரையாடல் நடத்தவுள்ளன.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பான அவரது X பதிவில், ‘வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைப் பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க வீர தீரமான தீர்மானத்தை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவியது குறித்து நான் பெருமைப்படுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இருவரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புகழ்ந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.