யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இன்று அதிகாலை அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைதாகியுள்ளனர்.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, அவர்கள் கைதானதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைதான இந்திய மீனவர்கள் தற்சமயம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த 12 இந்திய மீனவர்களும் மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.