இந்து சமுத்திர கடற்பரப்பில் நில அதிர்வு – இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது !

0
133
இலங்கைக்கு தென்கிழக்காக இந்து சமுத்திர கடற்பரப்பில், 5.8 ரிச்டர் அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.இன்று பிற்பகல் 12.59 அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளில் சிறிதளவு உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.