இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் : யாழ் மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

0
226

ஜனாதிபதி நாட்டிலுள்ள பிரச்சினையை சுமூகமாக தீர்க்கவேண்டும் என விரும்பினால், புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டும் என யாழ் மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் இ.முரளீதரன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.