இன்றும் அதிகரிப்பைப் பதிவு செய்த தங்க விலை

0
7

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 246,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 264,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 4,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது.

அதேபோன்று நேற்றைய தினம் 22 கரட் தங்கம் 243,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 3,600 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படிஇ இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒருகிராமின் விலை 33,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒருகிராமின் விலை 30,825 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,315.13 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை தங்கத்தின் விலை எதிர்வரும் காலங்களில் 30 முதல் 40 சதவீதம் வரையில் குறைவடையக்கூடும் என ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகப் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.