இன்று  சாவகச்சேரி மதுவரி  திணைக்களத்துக்கு அருகில் மதுபானம்  விற்றவர்கைது!

0
267

போயாதினமாகிய இன்றைய தினம் சாவகச்சேரி நகரப் பகுதியில்உள்ள மதுவரித்திணைக்களத்துக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில்  பியர் ,மதுபானம்  விற்பனை செய்தவர்   யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

30 வயதுடைய அதே இடத்தைச் சேர்ந்த நபர் போயா தினமாகிய இன்றைய தினம் சாவகச்சேரி மது வரி திணைக்களத்திற்கு அருகாமையில் உள்ள வீட்டில் சாராயம் மற்றும் பியர்  விற்பனையில்ஈடுபட்டு வந்ததாகவும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலின் படி  உப பொலிஸ் அத்தியட்சகரர் பிரதீப் தலைமையிலான  பொலிஸ் அணியினரால்   வீடு  முற்றுகையிடப்பட்டு நீண்ட காலமாக சட்டவிரோதமாக வீட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார், போலீசார் வீட்டினை முற்றுகையிடும் போது அங்கே அதிகளவானோர் போயா தினத்தில் மதுபானத்தை கொள்வனவு செய்ய வருகை தந்திருந்ததாகவும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பபொலிசார் தெரிவித்தனர் எனினும் மதுவரி திணைக்களத்துக்கு அருகில் இவ்வாறான ஒரு சட்ட விரோத செயற்பாடு சாவகச்சேரி மதுவரி திணைக்களத்தினருக்கு தெரியாமல் நடைபெற்றதா என கேள்வி எழுப்பப்படுகின்றது??

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து அதிகளவு சாராய போத்தல்கள் மற்றும் பியர் ரின்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது,