நாட்டில் இன்று மற்றும் நாளை சுழற்சி முறையில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ வரையான வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமையும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.