வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மாழை பெய்யக்கூடிய சாத்தியம் கானப்படுவதாக, யாழ்ப்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதய காலநிலை மாற்றம் தொடர்பில் இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே ரீ.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்….
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவா, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தாற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் பாதிப்புக்களில் இருந்து ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான முற்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றோம்.
இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பை பொறுத்தவரை கிழக்கு மற்றும் வடக்கு கடற்பரப்புக்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழவுள்ள கடற்பரப்புக்களில் காற்றானது வடகிழக்கு திசை நோக்கி வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 25 தொடக்கம் 35 வரை கிலோ மீற்றர் வரை கானப்படும்.
கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
குறித்த பகுதிகளின் கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் அதே வேளை நாட்டின் ஏனைய கடற்பரப்புக்கள் சாதாரன அலைகளுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடற்பரப்புக்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரையான பலத்த காற்று வீசுவதுடன், அவ் வேளைகளில் கடல் மீக கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.