மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய ஏ முதல் எல் வரை மற்றும் பி முதல் டபிள்யூ வரையான வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.