இன்றைய தினமும் வழமைபோல் மின்வெட்டு!

0
159

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் ஆரம்பமாகிறது. இந்நிலையில் இன்றைய தினமும் வழமைபோல் மின்வெட்டு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் கோரிக்கையின் அடிப்படையில் இன்றைய தினம் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பகலில் ஒரு மணி நேரமும் இரவில், ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறையில் இருக்கும். அத்துடன், வரும் நாட்களிலும் இது தொடரும் என்றும் கூறப்படுகின்றது. மேலும், உயர்தரப் பரீட்சை காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதிக உற்பத்தி செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது