இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0
47

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மேலும், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. 

மழையுடன் கூடிய மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.