நாட்டில் நிலவுகின்ற வறட்சியான வானிலையில் தற்காலிகமாக மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் மார்ச் 10 மற்றும் 11ம் திகதிகளில் மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் பல இடங்களில் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
காலி, மாத்தறை , களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இவைதவிர நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவக்கூடும்.
நாட்டின் பல இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும் என்றார்.