இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0
155

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (16) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.

ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலையே நிலவுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.