இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகஸ்தர்களுக்கு சான்றிதழ்

0
65

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வடமாகாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்காக மேற்கொண்ட 150 மணித்தியால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு நேற்று மாலை மன்னாரில் நடைபெற்றது.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மண்டபத்தில் சிரேஸ்ர மொழிப்பாட தேசிய வளவாளர் நு.சாகரிகா பிகிறாடோ தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் டிலான் ரணசிங்க, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் அஸ்வின் பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டாம் மொழி பாட வளவாளர் சுபாஜினி விநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.