25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கரையோர கரப்பந்தாட்ட போட்டி

இராணவத்தினரால் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நடாத்தப்பட்ட கரையோர கரப்பந்தாட்டப் போட்டியில் அம்பன் பிங் பொங் அணி வெற்றியீட்டியது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் 55வது காலாட் படையணியின் பகுதிக்கு உட்பட்ட கடற்கரையோரத்தை சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கடற்கரையோர கரப்பந்தாட்டத் தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று நேற்றைய தினம் இறுதிப் போட்டி இடம்பெற்றது.

55வது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன தலமையில் இடம்பெற்ற குறித்த போட்டி நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் வரவேற்க்கப்பட்டனர்.

தொடர்ந்து இராணுவ அணியின் கரையோர கரப்பந்தாட்ட அணியின் ஆசிய பதக்கங்களை வென்ற மகளிர் அணி மற்றும் ஆடவர் அணிகளின் காட்சி போட்டிகள் இடம்பெற்றன.

தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழகமும், கொடுக்கிளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகமும் மோதியதில் அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

இதில் வெற்றிபெற்ற அணிகளுக்கான சான்றிதழ்கள், பரிசில்கள், கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுகர்ண போதொட்ட, 55வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, 56வது படைப்பிரிவின் தளபதி மேஜர் கெனரல் காரியவசம், 551- தளபதி பிரிகேடியர் காரிய கரவண, 553- பிரிகேடியர் பெரேரா, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, வடமாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ், வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், வட மாகாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாப்பகூவ 306டி அரிமா கழக பிரதிநிதிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸார், கிராம சேவகர்கள், விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles