இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை பற்றிய தகவல்!

0
130

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் தமது 91ஆவது வயதில் நேற்று இரவு காலமானார்.
உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு 11 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் மலர்சாலையில் வைக்கப்பட்டு அதன்பின்னர் அவரது பூதவுடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.