இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பாரவூர்தி மோதி விபத்து – ஒருவர் பலி!

0
5

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது கனரக வாகனம் மோதியதில் காயமடைந்திருந்த ஆறு பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோப்பாய் – கைதடி வீதியில் உள்ள மயானத்துக்கு பூதவுடலை எடுத்து சென்றவர்கள் மீது வேகமாக பயணித்த பாரவூர்தி ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் காயமடைந்துள்ள ஏனையவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.விபத்தில் உயிரிழந்தவர் கோப்பாய் பகுதியைச்சேர்ந்த 30 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.