இலங்கைக்கான இந்தோனேசியா உயர்ஸ்தானிகர் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

0
117

இலங்கைக்கான இந்தோனேசியா உயர்ஸ்தானிகர் தேவி குஸ்டினா டாபிங், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு தொடர்ந்து முன்னின்று செயற்படவுள்ளதாக இலங்கைக்கான இந்தோனேசிய உயர்ஸ்தானிகர் தேவி குஸ்டினா டாபிங் இதன்போது அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தோனேசியாவின் ஆதரவு இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.