இலங்கைக்கான கடன் குறித்த ஐ.எம்.எவ் அறிவிப்பு 21ஆம் திகதி

0
179

இலங்கைக்கு கடன் அளிப்பதற்கான உடன்படிக்கை குறித்த ஐ.எம்.எவ்வின் அறிவிப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வெளியாகவுள்ளதுடன் முதல் தவணையாக 33 கோடி அமெரிக்க டொலர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட அனைத்து இரு தரப்பு கடன் வழங்குநர்களும் கடனை மறுசீரமைக்க உறுதியளித்ததையடுத்து, சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் நிறைவேற்று சபை நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கைக்கு கடன் வழங்குதற்கான அனுமதியை வெளியிடவுள்ளது.

அத்துடன், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட கடன் வழங்குநர்களின் நிதியுதவியும் ஊக்குவிக்கப்படும்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, நான்கு ஆண்டுகளில் ஒன்பது தவணை கடனின் முதல் தவணையை வெளியிட ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.