இலங்கைக்கான நியூஸிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்றூ ரவலர் மற்றும் முறையற்ற புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் அதிகாரி பிரட் சீல்ட் ஆகியோர் இன்று
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அம்கோர் நிறுவனத்திற்கு வருகை தந்தனர்.
மட்டக்களப்பில் வன்முறைத் தீவிரவாதத்தினை தடுப்பதற்கான செயற்றிட்டத்தினை மேற்கொள்ளும் அம்கோர் மற்றும் லிப்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
இடம்பெற்றது.
வன்முறை தீவிரவாதத்திற்கான காரணங்கள் அதனை கட்டுப்படுத்த தங்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றியும் முறையற்ற புலம்பெயர்தல் மற்றும் அதற்கெதிரான செயற்பாடுகள்
பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலில் அம்கோர் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் ப. முரளிதரன், சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோ. சிவயோகராஜன், லிப்ட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர்
ஜானு முரளிதரன், நிதிப்பணிப்பாளர் ந.ஜெபராஜா, நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சுதர்ஷன், கெல்விட்டாஸ் நிறுவன திட்ட உத்தியோகத்தர் ரமேஸ், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட குடும்பநல துறைத்தலைவர் வைத்தியர் அருளானந்தம் ஆகியோகர் கலந்து கொண்டனர்.
முறையற்ற புலம்பெயர்தலினால் ஏற்படும் சமூக பொருளாதார எதிர் விளைவுகள் அதன் அடிப்படையில் ஏற்படும் வன்முறைத் தீவிரவாதம் தொடர்பாக விரிவாக
கலந்துரையாடப்பட்டது.