இலங்கை உட்பட சில நாடுகளுக்கு கொவிட் தடுப்பூதியை விநியோகிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
80 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை இவ்வாறு நாட்டின் ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்க உள்ளதாக விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்துள்ளார்.
அதில் ஒரு பகுதி உலக சுகாதார அமைப்பின் கொவெக்ஸ் வேலைத்திட்டத்திற்கு விநியோக்கப்படவுள்ளன.
இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவுகள், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பபுவா நியு கீனி, தாய்வான் மற்றும் பசுபிக் தீவுகள் போன்றவற்றுக்கு இந்த ஏழு மில்லியன் தடுப்பூதிகளை இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கா பகிர்ந்தளிக்கவுள்ளது.