இலங்கைக்கு மேலும் புதிய விமானசேவைகள்: எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு

0
194

இலங்கைக்கான தனது விமானசேவையில் மேலும் ஐந்து சேவைகளை சேர்க்கவுள்ளதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த புதிய விமானசேவைகள் 2022 பிப்ரவரி 10 முதல் முன்னெடுக்கப்படும் எனவும், வாராந்தம் 26 விமானசேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

புதிதாக சேவையில் ஈடுபடும் விமானங்கள் ஒவ்வொரு செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த விமான சேவைகள் மூலம் 1,780 இருக்கைகளும் 100 தொன் பொதிகள் சேவையும் மேலதிகமாக உள்ளடக்கப்படும் எனவும் குறித்த விமானசேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குவைத் எயார்வேய்ஸ் நிறுவனம் இந்த வாரம் முதல் இலங்கைகான தனது அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

டொலர் நெருக்கடி மற்றும் உள்ளுர் அலுவலகங்களுக்கான செலவினங்கள் காரணமாக குவைத் எயார்வேய்ஸ் நிறுவனம் தனது விமான சேவைகளையும் நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக அல் ஜரிடா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.